குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்தியரான பாதுகாப்பு ஊழியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
குவைத்தில் Security ஊழியரான இந்தியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தின் Bayan பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகத்தில் இன்று காலை(24/07/21) கட்டிடத்தில் வைத்து தற்கொலை நடந்ததாக அவசரகால பாதுகாப்பு மையத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது, இதையடுத்து குவைத் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தூதரக தலைமையகத்திற்கு சென்று பாதுகாப்பு(Security) ஊழியர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். அவர் தனக்குத்தானே துப்பாக்கியால் அவருடைய தலையில் சுட்டுக் கொண்டதாக பாதுகாப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள முதல்கட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்துக்கொண்ட இந்தியர் பெயர் ஜெகதீஷ்(வயது-44) என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. அவருடைய தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.