குவைத்தில் வசிக்கின்ற தமிழர் ஒருவர் திட்ட அட்டவணை மாறுபாட்டை துல்லியமாக கணிக்கும் புதிய செயல்பாட்டு முறையை வெளியிட்டு தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்
Image : சாதனையாளர் ஜோயல் ஜெயசீலன் சந்திரகுமார்
குவைத்தில் வசிக்கின்ற தமிழர் ஒருவர் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்
திட்ட மேலாண்மையின்(Project Management) ஒரு முக்கிய செயல்பாடான திட்ட அட்டவணை மாறுபாட்டை(Project Schedule Variance) துல்லியமாக மொத்த மிதவையைக்(Total Float) கொண்டு கணிக்கும் செயல்பாட்டு முறையை கண்டுபித்து நம் இந்திய நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பொறியாளர் ஜோயல் ஜெயசீலன் சந்திரகுமார்
இவரது கண்டுபிடிப்பின் மூலம் இனி கட்டுமானம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் திட்ட அட்டவணை மாறுபாட்டினால் ஏற்படும் பெரும் வணிக இழப்பை தவிர்க்கலாம். இவரது கண்டுபிடிப்பு சர்வதேச பத்திரிக்கையான “Australian Journal for Multi-Disciplinary Engineering” இல் வெளியிட பட்டுள்ளது. உலகின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான “Taylor and Francis” நிறுவனம் இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.
இவர் 2008-ஆம் ஆண்டு முதல் குவைத்தில் உள்ள Gulf Spic நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் . இந்த, ஆய்வின் வெற்றிக்கு காரணமான இறைவனுக்கும் மற்றும் எல்லா காரியங்களிலும் உறுதுணையாக இருந்த பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் Gulf Spic நிறுவனத்திற்கும் நன்றி செலுத்துவதாக தெரிவித்தார். இருவருடைய ஆய்வு அறிக்கையை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க கிழே உள்ள இணைப்பை Click செய்யவும் அதற்கான LINK:
https://www.tandfonline.com/eprint/63UP67ZMGYPZWGWRAYRQ/full?target=10.1080/14488388.2021.1922131