குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி;கோவ்ஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் குவைத்தில் நுழைய முடியும் என்று இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
Image : இந்திய தூதர் சிபி ஜார்ஜ்
கோவ்ஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் குவைத்தில் நுழைய முடியும் என்று தூதர் விளக்கம் அளித்துள்ளார்
இந்தியாவில் இருந்து கோவ்ஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் குவைத்துக்குள் நுழைய முடியும் என்று குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். குவைத்தின் தினசரி நாளிதழான அல்-ராய்க்கு அவர் அளித்த பேட்டியில் தமிழர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களிடையே நிலவிய குழப்பங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெளிவுபடுத்தினார்.
மேலும் கோவ்ஷீல்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை ஒரே தடுப்பூசி என்பது குவைத் அதிகாரிகளுக்குத் தெரியும் எனவும்,இந்தியாவில் இருந்து கோவ்ஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களின் தடுப்பூசி சான்றிதழுக்கு குவைத் ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அதுபோல் கோவ்ஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் குவைத்துக்குள் நுழைவதற்கு தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பலர் அஞ்சுகிறார்கள் எனவும், தடுப்பூசி சான்றிதழில் கோவ்ஷீல்ட்/அஸ்ட்ராஜெனெகா(Covishield-AstraZeneca) என்று குறிப்பிட்டுள்ள அனைவரும் குவைத் விமான நிலையம் வழியாக நுழைய அனுமதி அளிக்கப்பட்டதும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டில் நுழைய முடியும் எனவும் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் கூறுகையில் கடந்த பிப்ரவரியில், இந்தியா நாடு ஆனது குவைத்திற்கு 2 லட்சம் டோஸ் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது எனவும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.