BREAKING NEWS
latest

Saturday, July 31, 2021

சவுதியில் மகளின் திருமணத்திற்காக செல்லவிருந்த இந்தியர் தூக்கத்திலேயே உயிரிழந்தார்

சவுதியில் மகளின் திருமணத்திற்காக செல்லவிருந்த இந்தியர் தூக்கத்திலேயே உயிரிழந்தார்

Image : உயிரிழந்த ஜாபர்(வயது-54)

சவுதியில் மகளின் திருமணத்திற்காக அடுத்த வாரம் தாயகம் செல்லவிருந்த இந்தியர் உயிரிழந்தார்

சவுதியில் தனது மகளின் திருமணத்திற்காக அடுத்த வாரம் தாயகம் செல்லவிருந்த இந்தியர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. தெற்கு சவுதி அரேபியாவின் அபு ஆரிஷில் வேலை செய்துவந்த அவர் தன்னுடைய அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது தூக்கத்திலேயே உயிரிழந்தார். அவருடைய பெயர் ஜாபர்(வயது-54) மலப்புரம்,முன்னியூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தினமும் கடையில் வேலைக்கு செல்லும் அவர் நேற்றைய தினம் வேலைக்கு வர தவறியதால் சக ஊழியர் குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது ஜாபர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டார்.

இதையடுத்து அவசரகால உதவிக்குழுவான ரெட் கிரசண்ட் பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் அபு ஆரிஷ் ஜெனரல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஜாபர் சவுதி, அமீரகம் மற்றும் ஓமன் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளைகுடா வாழ் இந்தியர் ஆவார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்புதான் அபு ஆரிஷில் வேலைக்காக வந்துள்ளார். அவர் கடைசியாக இந்திய சென்று குடும்பத்தினரை பார்த்து நான்கு வருடங்கள் ஆகிறது. மரணமடைந்த ஜாபருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to சவுதியில் மகளின் திருமணத்திற்காக செல்லவிருந்த இந்தியர் தூக்கத்திலேயே உயிரிழந்தார்

« PREV
NEXT »