குவைத் விமான நிலையத்தில் வருகின்ற பயணிகளுக்கு எடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரத்து செய்வதாக அறிவிப்பு
Image: அதிகாரி சலே அல்-ஃபடகி
குவைத் விமான நிலையத்தில் எடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரத்து செய்வதாக விமான நிலைய அதிகாரி அறிவிப்பு
வெளிநாட்டிலிருந்து குவைத்துக்கு வரும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான பி.சி.ஆர் சோதனை கட்டணம் வசூலிப்பதை திரும்பப் பெறப்பட்டதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துள்ளது. விமான நிலையம் வந்திறங்கும் பயணிகளில் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் இந்த சலுகை கிடைக்கும். தற்போது வரையில் குவைத் மொசாஃபர் பயன்பாட்டு செயலி வழியாக நாட்டிற்கு வருகின்ற பயணிகளுக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக 20 தினார் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணமே தற்போது திரும்பப் பெறப்பட்டதாக விமான நிலைய துணை ஜெனரல் சலே அல்-ஃபடகி தெரிவித்தார்.
குவைத் சிவில் ஏவியேஷன் நேற்று வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, நாட்டிற்கு வரும் பயணிகள் அனைவருமே ஏழு நாள்கள் கட்டாயமாக வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். இந்த காலகட்டத்தை குறைக்க விரும்புவோர் சில தினங்களுக்கு பிற்கு மீண்டும் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனை செய்து எதிர்மறையாக இருந்தால் தனிமைப்படுத்தலை முடித்து கொள்ளலாம் மற்றும் இந்த பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை நேரடியாக பயணிகள் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.