ஓமான் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழைய தடை விதித்து புதிய அறிவிப்பை இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது
Image credit: Oman Airlines
ஓமான் 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழைய தடை விதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
ஓமானில் கோவிட் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உலகெங்கிலும் உள்ள 23 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்து அறிவிப்பை இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது.ஜூலை 9 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(08/07/21) வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், துனிசியா, இங்கிலாந்து, புருனே, இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஈரான், அர்ஜென்டினா, பிரேசில், சூடான், ஈராக், பிலிப்பைன்ஸ், தான்சானியா, தென்னாப்பிரிக்கா, சியரா லியோன், கானா, கெனியா, கொலம்பியா, லிபியா மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.இதற்கிடையே லெபனான் ஓமானில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக Government Communication Center ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதில் இந்திய உள்ளிட்ட சில நாடுகளின் விமான சேவை தடையானது கடந்த ஏப்ரல் 24 முதல் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அனுமதி உள்ளவர்கள் மற்றும் ஓமான் குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.