அமீரகம்,எத்தியோப்பியா,ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சவுதியில் நுழைய மீண்டும் தடை விதித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது
அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து சவுதியில் நுழைய மீண்டும் தடை;இந்த புதிய உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வரும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இங்கு தங்கியுள்ள வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய மீண்டும் தடை விதிக்கப்பட்டு சவுதி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த நாடுகள் வழியாக வரும் பயணிகளுக்கும் சவுதியில் நுழைய அனுமதி இருக்காது. இதுபோல் சவுதி நாட்டினருக்கும் இந்த நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் சவுதி குடிமக்கள் சிறப்பு அனுமதியுடன் மட்டுமே இந்த நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,இந்த புதிய உத்தரவு நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும், கோவிட்டின் மரபணு மாற்றம் ஏற்பட்ட வைரஸ் வகைகளின் அதிகரிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முடிவின் மூலம், தற்போது இந்த நாடுகளில் உள்ள சவுதியில் நுழைய காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் நாளை இரவுக்கு பிறகு இந்த நாடுகளை விட்டு வெளியேறி 14 நாட்கள் வேறொரு நாட்டில் தங்க வேண்டியிருக்கும். இதற்குப் பிறகு மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியும். மேலும் இந்தியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நேரடியாக நுழைய முன்னர் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில், இந்த நாடுகளில் இருந்து வருகின்ற சவுதி குடிமக்களுக்கு 14 நாள் நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.