குவைத்துக்குள் ஆகஸ்ட் 1 முதல் நுழையும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களுக்கான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது
Image : KuwaitCity
குவைத்துக்குள் ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டினர் நுழைய தேவையான நிபந்தனைகள் தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விரிவாக வெளியிட்டுள்ளது
குவைத்துக்குள் ஆகஸ்ட்-1,2021 முதல் நுழையும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களுக்கான நிபந்தனைகள் தொடர்பாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விரிவான வழிகாட்டுதல்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. குவைத்துக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்வருமாறு:
- குவைத்திலிருந்து தடுப்பூசி போட்ட பிறகு நாட்டிலிருந்து வெளியே சென்று திரும்பி வருபவர்களின் Immune Application / Kuwait Mobile I'd யின் நிறம் பச்சை நிறமாக இருக்க வேண்டும்.
- நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணிநேரத்திற்குள் செல்லுபடியாகும் விதத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சான்றிதழ் எடுத்துவர வேண்டும். கோவிட் நோய்தொற்று தொடர்பான எந்த அறிகுறியும் பயணியிடம் இருக்க கூடாது.
- குவைத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர்(Pfizer), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா(Oxford-AstraZeneca), மாடர்னா(Moderna) தடுப்பூசி என்றால் இரண்டு டோஸ் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது ஜான்சன் & ஜான்சனின்(Johnson & Johnson) தடுப்பூசி என்றால், நீங்கள் ஒரு டோஸ் மட்டுமே எடுத்திருந்தாலும் போதுமானதாக இருக்கும்
- தாயகத்தில் தடுப்பூசி 2 டோஸ் எடுத்தவர்கள் QR-CODE உள்ள சான்றிதழை இந்திய சுகாதாரத்துறையின் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றிய பிற்கு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- Shlonik Application மற்றும் Kuwait- Mosafer தளத்திலும் பயணிகள் தங்கள் தகவல்களை பதிவு(Register) செய்ய வேண்டும்.
- நாட்டிற்கு வந்து சேரும் பயணிகள் விமான நிலையத்தில் பி. சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் தனிமைப்படுத்தலை முடிக்க விரும்புவோர் தங்கள் சொந்த செலவில் சில தினங்களுக்கு பிறகு பி.சி.ஆர் பரிசோதனை செய்து முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால், தனிமைப்படுத்தலை முடிக்கலாம்.
கடந்த மாதம் 17-ஆம் தேதி வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட்-1,2021 முதல் நாட்டில் நுழைவதற்கு அனுமதி அளித்து அமைச்சரவையின் முடிவு வெளியாகியிருந்தது. ஆனால் இன்று(27/08/21) செவ்வாய்க்கிழமை இதுவரை வெளிநாட்டவர்கள் நேரடியாக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்களா....??? என்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவிவந்தது. இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புதிய முடிவின்படி, செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி(Validity Visa) உள்ள எவரும் மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் நேரடியாக நாட்டிற்குள் நுழையலாம். இருப்பினும், தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவு செய்தவர்களில் இந்தியர்கள் உட்பட பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர்களின் சான்றிதழ்களுக்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த பிரச்சனை தீர்க்கப்படும்போது மட்டுமே வெளிநாட்டினரின் வருகை முழுமையாக சாத்தியமாகும்.