BREAKING NEWS
latest

Thursday, July 29, 2021

குவைத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முன்றாவது நாடு வழியாக நுழைய முடியும்

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு நேரடியான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையின் அனுமதி கிடைத்தால் முன்றாவது நாடு வழியாக ஆகஸ்டு-1,2021 முதல் நுழைய முடியும்

Image : விமான நிலையத்தின் இயக்குனர் யூசுப் அல் ஃபவுஸன்

குவைத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முன்றாவது நாடு வழியாக நுழைய முடியும்

குவைத் விமான நிலையத்தின் இயக்குனர் யூசுப் அல் ஃபவுஸன் அவர்கள் இன்று கூறுகையில் ஆகஸ்ட் 1,2021 முதல் மூன்றாவது நாடுகள் வழியாக அதாவது டிரான்சிஸ்ட்(TRANSIT) ஆக இந்தியர்கள் நாட்டில்(குவைத்தில்) நுழைய முடியும். ஆனால் இவர்கள் முன்பு போல் அந்த நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்(Quarantine) இருக்க வேண்டியதில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். யூசுப் அவர்கள் குவைத் இந்திய தூதரகத்தில் இன்று(29/07/21) மாலையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இந்த புதிய விளக்கத்தை அளித்துள்ளார்

மேலும் அவர் கூறுகையில் குவைத் சுகாதரத்துறையின் தளத்தில் Upload செய்யப்பட்ட தடுப்பூசி சான்றிதழுக்கு ஒப்புதல் கிடைத்து, Immune செயலியில் பச்சை நிறம் தெளிந்தால் அந்த பயணிகள் தற்போதைய சூழ்நிலையில் மூன்றாவது நாடு வழியாக இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அனைத்து பயண நடைமுறைகளையும் பூர்த்தி செய்து வர முடியும் என்றார். சுருக்கமாக சொன்னால் மேற்குறிப்பிட்ட சுகாதரத்துறையின் அனுமதி கிடைத்தால் ஆகஸ்ட் 1 முதல் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி(Validity Work Permit) உள்ள அனைவரும் குவைத்துக்கு விமான சேவையுள்ள மற்றொரு நாடு வழியாக அந்த நாட்டில் தனிமைப்படுத்தலில் இருக்காமல் குவைத்துக்குள் நுழைய முடியும். இதற்கிடையே குவைத் விமான நிலையம் வழியாக அனுமதிக்கும் தினசரி பணிகளின் எண்ணிக்கை 5000 யிருந்து 10000 ஆக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

Add your comments to குவைத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முன்றாவது நாடு வழியாக நுழைய முடியும்

« PREV
NEXT »