BREAKING NEWS
latest

Friday, July 9, 2021

குவைத்தில் வேலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 14,600 வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன

குவைத்தில் வேலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறுபட்ட காரணங்களால் 14,600 வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்று போக்குவரத்து துறை அறிவிப்பு

Image : KuwaitCity Road

குவைத்தில் வேலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 14,600 வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன

குவைத்தில் வேலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக 14,600 வெளிநாட்டவர்கள் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்துள்ளதாக குவைத் பொது போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எனவே இப்படிப்பட்டவர்கள் அவர்களின் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தவோ புதுப்பிக்கவோ முடியாது. ஓட்டுநர் உரிமம் தேவையான வேலையைச் செய்தவர்கள் அந்த வேலைகளை விட்டு வெளியேறும்போது உரிமங்கள் ரத்து செய்யப்படுகின்றன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 15,75,000 ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் உள்ளனர் எனவும், இவர்களில் 6,70,000 பேர் குவைத் குடிமக்கள் எனவும் 8,50,000 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குவைத்தில் சுமார் 30,000 பெதுனீகள் மற்றும் 25,000 வளைகுடா நாட்டவர்களும் ஓட்டுநர் உரிமங்களை கைவசம் வைத்துள்ளனர்.நாட்டில் சுமார் 3 லட்சம் வாகனங்கள் போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கும் தேவையில்லாத நிலையில் அவற்றை ரத்து செய்வதற்கும் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். எந்தவொரு சலுகையும் வழங்கக்கூடாது என்று உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து துறை உதவி செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல் சயே சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் ஏதேனும் பூர்த்தி செய்யப்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். குவைத் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் படிப்பை முடித்த பிறகும் உரிமங்களை திருப்பித் தருவதில்லை. அத்தகைய நபர்களின் உரிமங்கள் போக்குவரத்துத் துறையால் ரத்து செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் பிடிபட்டால், நாட்டின் சட்டத்தை மீறியதற்காக நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த செய்தி படிக்கும் நமது உறவுகளில் யாருக்காவது மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக ஓட்டுநர் உரிமம் ரத்து ஆகியிருந்தால் Comment செய்யவும்.

Add your comments to குவைத்தில் வேலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 14,600 வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன

« PREV
NEXT »