எமிரேட்ஸ் கோவிட் நெருக்கடி காரணமாக பயணச்சீட்டு எடுத்துக்கொண்ட நிலையில் பயணிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கிய தங்களுடைய பயணிகளுக்கு 850 கோடி திர்ஹாம் திருப்பி வழங்கியுள்ளது
Image credit: Emirates Airlines
எமிரேட்ஸ் கோவிட் நெருக்கடி காரணமாக தங்களுடைய பயணிகளுக்கு 850 கோடி திர்ஹாம் திருப்பி வழங்கியுள்ளது
உலகளாவிய கோவிட் நெருக்கடியால் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எமிரேட்ஸ் 850 கோடி திர்ஹாம் திருப்பி வழங்கியுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட பயணிகளுக்கு சிரமங்களைத் தவிர்த்து, குறுகிய காலத்தில் இதற்கு தேவையான நடவடிக்கைகளை முடிக்க முடிந்ததாக எமிரேட்ஸின் வணிகத்துறை தலைமை அதிகாரி அட்னான் காசிம்(Adnan Kazim) தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து மியாமிக்கு எமிரேட்ஸின் முதல் சேவை நேற்று(22/07/21) தொடங்கி வைத்த நிகழ்ச்சியை முன்னிட்டு எமிரேட்ஸ் அதிகாரிகள் பயணிகளுக்கு திருப்பிச் செலுத்திய தொகை(Refund Amount)குறித்த விவரங்கள் வெளியிட்டனர்.
மேலும் விமான நிறுவன அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில் பயணிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் மற்றொரு தேதியில் முன்பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது, அதுவும் இல்லை என்றால் அந்த தொகையினை வவுச்சர்களாக மாற்றவோ அல்லது டிக்கெட் எடுக்க செலுத்திய பயணத்தை ரொக்க பணமாக திருப்பி வழங்கவும் செய்யப்பட்டது எனவும் நுகர்வோர்களுக்கே எப்போதும் முதலிடம் என்று அவர் கூறினார். கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் தங்கள் விமான நிறுவனம் இருந்த இடத்திற்கு தங்கள் சேவைகளை திரும்ப கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்து வருவதாக எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.