BREAKING NEWS
latest

Wednesday, July 28, 2021

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்கள் மேலும் தாமதமாகும் என்று எமிரேட்ஸ் சற்றுமுன் தெரிவித்துள்ளது

அமீரகத்திற்கான விமான சேவை துவங்குவது மேலும் தாமதமாகும் என்று எமிரேட்ஸ் சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image credit: Emirates Airlines

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்கள் மேலும் தாமதமாகும் என்று எமிரேட்ஸ் சற்றுமுன் தெரிவித்துள்ளது

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட்- 7,2021வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இன்று(28/07/21) மாலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எமிரேட்ஸ் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக சற்றுமுன் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்தும் ஆகஸ்ட் 7 வரை அமீரகத்திற்கு எந்த சேவைகளும் இருக்காது எனவும் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னர் ஜூலை-31,2021 வரையில் இந்தியா உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து விமான சேவைகள் இருக்காது என்று எமிரேட்ஸ் அறிவித்திருந்தது.

இதுதான் இப்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்தாவது அமீரகத்திற்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.கோவிட் பரவல் உயர்ந்த நிலையில் கடந்த ஏப்ரல்-24,2021 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add your comments to இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்கள் மேலும் தாமதமாகும் என்று எமிரேட்ஸ் சற்றுமுன் தெரிவித்துள்ளது

« PREV
NEXT »