இந்தியா,இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து அமீரகத்திற்கான விமான சேவை ஜூலை-21 வரை கிடையாது என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Image credit: Emirates Airlines
இந்தியா,இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து அமீரகத்திற்கான விமான சேவை ஜூலை-21 வரை கிடையாது
இந்தியா,இலங்கை,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமான பயண சேவைகள் ஜூலை 21 வரை கிடையாது என்று எமிரேட்ஸ் நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று(12/07/21) மதியம் புதிய அறிவிப்பை வெளியிடுள்ளது. அதேபோல் மேற்குறிப்பிட்ட நாட்கள் வழியாக கடந்த 14 நாட்களில் பயணம் செய்த நபர்களையும் எந்தவொரு இடத்திலிருந்தும் பயணம் செய்ய தங்கள் நிறுவனம் அனுமதிக்காது என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது அலை கொரோனா பரவல் இந்தியாலில் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் கடந்த ஏப்ரல்-24 முதல் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமீரகம் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து மே-13 முதல் இலங்கை, நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அமீரகத்திற்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இன்றளவும் அந்த தடை தொடர்கிறது. இந்த தடையிலிருந்து அமீரக குடிமக்கள், Golden Visaa உள்ளவர்கள், இராஜதந்திர பிரநிதிகள், Business Partner Visa உள்ளவர்கள் மற்றும் அமீரக அதிகாரிகளின் சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.