துபாய் குடிவரவு துறை அதிகாரிகள் முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,மேலும் தொழிலாளி மீது பொய்யான புகார் அளித்தால் 5,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்
Image credit : Official Soure
துபாய் குடிவரவு துறை தொழிலாளி மீது பொய்யான புகார் அளித்தால் 5,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அமீரகத்தில் தொழிலாளிக்கு வழங்கப்படும் விசாவில் குறிப்பிட்டுள்ள வேலை மற்றும் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட விவகாரத்துறையின் அனுமதி வாங்கிய இடங்களில் வேலை செய்வதற்கான அனுமதி மட்டுமே உள்ளது. இப்படி விதிமுறை உள்ள நிலையில் தான்(Sponsore) அழைத்துவந்த தொழிலாளி தன்னுடைய அனுமதி இல்லாமல் வேறு இடத்தில் வேலை செய்வது தெரியவந்தால் அதை சம்பந்தப்பட்ட விவகாரத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் இதை தவறாக பயன்படுத்தி பல முதலாளிகள் தொழிலாளியின் மீது தப்பியோடியதாக(வீட்டைவிட்டு ஓடியதாக) பொய்யான புகார்களை பதிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் துபாய் குடிவரவு துறை(Emigration Department?) அதிகாரிகள் முதலாளிகளுக்கு(Sponsore) புதிதாக அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும்,அந்த அறிக்கையில் தொழிலாளி மீது பொய்யான புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு 5,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு ஓடியதாக பொய்யான புகார்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளியின் உரிமைகளை பாதுகாக்கவும்,தொழிலாளி மற்றும் முதலாளி இடையே நல்ல உறவை பேணும் வகையிலும் இந்த புதிய உத்தரவை குடிவரவு துறை வெளியிட்டுள்ளது.