இந்தியாவில் இருந்து துபாய்க்கு மேலதிக அறிவிப்பு வரும் வரை விமான சேவை ஒத்திவைப்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது
Image credit: Emirates Airlines
இந்தியாவில் இருந்து துபாய்க்கு மற்றொரு அறிவிப்பு வரும் வரை விமான சேவை ஒத்திவைப்பதாக எமிரேட்ஸ் அறிவிப்பு
இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் விமானங்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முன்னதாக,இந்தியா-துபாய் இடையேயான சேவைகள் ஜூலை-7,2021 முதல் தொடங்கும் என்று எமிரேட்ஸ் ட்விட்டரில் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணித்த பயணிகளை வேறு எங்கிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடைய முந்தைய நாள்,எட்டிஹாட் ஏர்வேஸ் ஜூலை-21 வரை இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு சேவைகள் கிடையாது என்று அறிவித்திருந்தது. இன்று காலையில் எர் இந்தியாவும் ஜூலை- 21 அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து விமான சேவைகள் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஜூலை 21 க்கு முன்னர் இந்தியா-யுஏஇ இடையேயான விமான சேவைகள் தொடங்கும் வாய்ப்புகள் முற்றிலுமாக மங்கிவிட்டன. மேலும் எமிரேட்ஸ் நிறுவனம் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் வலைத்தளத்தின் உங்கள் டிக்கெட்(Keep your ticket)பிரிவுக்குச் சென்று கூடுதல் தகவல்களை அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது.