இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கான விமான சேவை ஜூலை-21 வரையில் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது
Image credit: Air-India
இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு விமான சேவை துவங்குவது,மேலும் நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஜூலை-21,2021 வரை இந்தியாலில் இருந்து விமானங்களை இயக்கப்போவதில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றொரு நாள் விடுமுறைக்கு இலவசமாக டிக்கெட்டுகளை மாற்ற முடியும் என்றும் ஏர் இந்தியா தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா செல்லும் ஒரு வழி பயணிகளுக்கு இந்த சலுகை கிடையாது.முன்னதாக, ஏர் இந்தியா ஜூலை-6 வரையில் விமானங்கள் இருக்காது என்று கூடியிருந்த நிலையில், முடிவு நீட்டிக்கப்பட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஜூலை 21 வரை இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் அறிவித்திருந்தது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளில் ஐக்கிய அரபு எமிரேட் ஒப்புதல் அளித்த இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி மற்றும் Validity Work விசா வைத்திருப்பவர்கள் கடந்த ஜூன்-23 ஆம் தேதி முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சில விமான நிறுவனங்கள் இதன் அடிப்படையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளன, ஆனால் பயண விதிமுறைகளின் தெளிவற்ற தன்மை காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமானங்களுக்கான பயண தடை கடந்த ஏப்ரல்-25 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேரடியாக நுழைவதற்கான தடை நிலுவையிலுள்ள போதிலும் இராஜந்திர பிரதிநிதிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகளிடமிருந்து பயண அனுமதி பெற்றவர்களுக்கும் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.