கொரோனா பாதிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிபடையில் உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியிலில் ஐக்கிய அரபு அமீரகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது
Image : Beautiful UAE
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியிலில் ஐக்கிய அரபு அமீரகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகம்(UAE) உலகின் இரண்டாவது பாதுகாப்பான நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக நாடுகளின் நிலைமையின் அடிப்படையில் குளோபல் பினான்ஸ் இதழின் மதிப்பீட்டில் 134 நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக இதழின் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாடுகளின் பட்டியலை போர், தனிநபர் பாதுகாப்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் கோவிட் பரவல் மற்றும் அதைக் கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
உலக நாடுகளில் தடுப்பூசி இறக்குமதி மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் பட்டியில் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது உள்ளது. சுமார் 74.5 சதவீத மக்கள் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். 64.3 சதவீதம் பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர். அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் சுகாதாரத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.இந்த ஆய்வு அறிக்கையானது மே 30,2021 வரையிலான தரவுகளை அடிப்படையாக கொண்டு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. கத்தார் மூன்றாவது இடத்திலும், சிங்கப்பூர் நான்காவது இடத்திலும் உள்ளன. வளைகுடா நாடுகளில், பஹ்ரைன் 12 வது இடத்திலும், குவைத் 18 வது இடத்திலும், சவுதி அரேபியா 19 வது இடத்திலும், ஓமான் 25 வது இடத்திலும் உள்ளன. அதுபோல் இலங்கை 44 வது இடத்திலும் நேப்பாளம் 43 வது இடத்திலும், இந்தியா 91 வது இடத்தில் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதுபோல் கடைசி இடமான 134 வது இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது.