சவுதியில் வேலை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நேரத்தில் சம்பளம் வழங்கப்படாவிட்டால் நிறுவனங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image : Beautiful Saudi
சவுதியில் வேலை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நேரத்தில் சம்பளம் வழங்கப்படாவிட்டால் நிறுவனங்களை அபராதம் விதிக்கப்படும்
சவுதியில் வேலை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நேரத்தில் சம்பளம் வழங்கப்படாவிட்டால் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி 10 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நேரத்தில் சம்பளம் வழங்கப்படாவிட்டால் 3,000 ரியால்கள் அபராதம், 10 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தினால் 5,000 ரியால்கள் அபராதம் எனவும்,இது தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வசூலிக்கபடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.