அமீரகத்தில் நேற்றைய குலுக்கலில் இந்தியருக்கு 40 கோடி ரூபாய் பிக்-டிக்கெட்டில் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது
Image : ரஞ்சித் சோமராஜன் குடும்பத்துடன்
இந்தியருக்கு 40 கோடி ரூபாய் பிக்-டிக்கெட்டில் பரிசுத்தொகையாக கிடைத்த மகிழ்ச்சியாக செய்தி வெளியாகியுள்ளது
அபுதாபி பிக் டிக்கெட்டின் 229-வது தொடரின் லாட்டரியில் இந்தியர் முதல் பரிசு வென்றார். துபாயில் வசிக்கும் ரஞ்சித் சோமராஜன், பிக் டிக்கெட்ல் 2 கோடி திர்ஹாம்(சுமார் 40 கோடி இந்திய ரூபாய்) வென்றார். ஜூன்-29 அன்று 349886 என்ற எண் கொண்ட பிக்-டிக்கெட்டை அவர் வாங்கினார், இதுவே அவருக்கு முதல் பரிசை கிடைக்க செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதுபோல் இரண்டாவது பரிசுத்தொகையாக 30 லட்சம் திர்ஹாம்(சுமார் 6 கோடி இந்திய ரூபாய்) டிக்கெட் எண் 355820 டிக்கெட் எடுத்திருந்த ரென்ஸ் மேத்யூ என்ற இந்தியர் வென்றார்.
அதுபோல் மூன்றாம் பரிசு 10 லட்சம் திர்ஹாம்(சுமார் 2 கோடி ரூபாய ) இந்தோனேசியா நாட்டை சேர்ந்த ஜாஸ்மின் கோல்பி ஜெய்ன் என்ற நபர் டிக்கெட் எண் 006368 க்கு இந்த தொகையினை வென்றார். கடைசி டிராவில் முதல் பரிசை வென்றவர் இந்த முறை முதல் பரிசுக்கான டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார். பிக் டிக்கெட் பிரதிநிதி பரிசை பெற்றதை அறிவிக்க தொலைபேசியில் அழைத்தபோது, ரஞ்சித் தான் டிராவை live-யில் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இப்போது தனது குடும்பத்தினருடன் இருப்பதாகவும் கூறினார். அவர் 10 நண்பர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது பரிசான ஒரு லட்சம் திர்ஹாம் இந்தியாவைச் சேர்ந்த சாந்தகுமார் ராய் என்பவர் வாங்கிய டிக்கெட் எண் 106548 இந்த தொகையினை வென்றார். ஐந்தாவது பரிசான 80,000 திர்ஹாம் இந்தியாவைச் சேர்ந்த வஜப்பிலி ராஜன் மேனன் வாங்கிய டிக்கெட் எண் 000122 வென்றார். ஆறாவது பரிசான 50,000 திர்ஹாம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா செலிசியா கிங் என்பவர் டிக்கெட் எண் 180461 வென்றார். இந்த போட்டியில் கடைசியாக ட்ரீம் காரான பிஎம்டபிள்யூ கன்வெர்ட்டிபிள் 420 ஐ டிக்கெட் எண் 014900 எடுத்த இந்தியாவைச் சேர்ந்த ஷினி ஷாகிக் வென்றார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.