குவைத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கர்ப்பமாக இருந்த இந்தியாவை சேர்ந்த தாயும் குழந்தையும் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Image : உயிரிழந்த தாய் சினி(வயது-43)
குவைத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கர்ப்பமாக இருந்த இந்தியாவை சேர்ந்த தாயும் அவருடைய குழந்தையும் உயிரிழந்தனர்
குவைத்தில் இந்தியா,கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் சினி சந்தோஷ்(வயது-43) கொரோனா காரணமாக சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். மேலும் சினி 7 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் பிறக்காத குழந்தையை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர், ஆனால் குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவிட் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட சினி கடந்த சில நாட்களாக ஃபர்வானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(24/07/21) மாலையில் உயிரிழந்தார். அவருடைய கணவர் சந்தோஷ் Al-Ghanim, Automotive Company-யில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த தம்பதியினரின் மூத்த மகன் அனந்தராம் Indian Integrated பள்ளியில் 12 வகுப்பு மாணவர் ஆவார். நீண்ட இடைவெளியில் தங்களின் இரண்டாவது குழந்தை பிறக்கும் மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தை கொரோனா என்ற வைரஸ் புரட்டிபோட்டது. சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட நிலையில் உடல்கள் சர்வதேச கொரோனா விதிமுறைகளுக்கு இணங்க இன்று(25/07/21) ஞாயிற்றுக்கிழம சுலைபிகாத் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோல் மற்றொரு இந்திய பெண்மணியாக ஷனா தனேஷ்(வயது-42) கோவிட் தொற்று மூலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக ஃபர்வானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். ஷனா அவர்கள் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Image: உயிரிழந்த ஷனா(வயது-42)