BREAKING NEWS
latest

Tuesday, July 20, 2021

சவுதியில் நுழைய பயணத்தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்களின் இகாமா மற்றும் விசா ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

சவுதியில் நுழைய பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கு இகாமா மற்றும் விசா ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படும்

Image : சவுதி மன்னர்

சவுதியில் நுழைய பயணத்தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்களின் இகாமா மற்றும் விசா ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக பயண தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரின் இகாமா மற்றும் விசாக்கள் ஆகஸ்ட்- 31,2021 வரை செல்லுபடியாகும் விதத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மன்னர் சல்மான் அவர்கள் இன்று(20/07/21) மாலையில் வெளியிட்டார். முன்னதாக, இகாமாவின் காலாவதி, விசிட் விசாக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான பணி விசாக்கள் ஜூலை இறுதி வரை நீட்டிக்க மன்னர் உத்தரவிட்டு புதுப்பித்தல் செய்து வழங்கப்பட்ட நிலையில், இன்று ஆகஸ்ட் 31 வகையில் நீட்டிப்பு செய்து வழங்க புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள விசாக்களை ஜவசாத் பிரவு Automatic Renewal System மூலம் புதுப்பித்தல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா புதுப்பித்தல் செய்து வழங்க மன்னர் இந்த புதிய உத்தரவிட்டுள்ள வெளியிட்டுள்ள நிலையில்,தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து உடனடி விமான சேவை இருக்காது என்று தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Add your comments to சவுதியில் நுழைய பயணத்தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்களின் இகாமா மற்றும் விசா ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

« PREV
NEXT »