கத்தாருக்கு ஜூலை-12 முதல் வருகின்ற தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை,இந்த புதிய அறிவிப்பு இந்தியர்களுக்கும் பொருந்தும்
Image : Beautiful Qatar
கத்தாருக்கு ஜூலை-12 முதல் வருகின்ற தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை
கத்தார் விசா உள்ள இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினரும் ஜூலை-12,2021 முதல் வரும்போது தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு இந்தியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த அறிவிப்பை கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் Green, Yellow மற்றும் Red பட்டியலில் உள்ள இந்தியர்களுக்கும் பொருந்தும். அதே சமயம் கட்டார் வந்ததும் RT-PCR பரிசோதனை செய்து Negative ஆக இருக்க வேண்டும், அதே சமயம் Positive ஆக இருந்தால் தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும்.புதிய அறிவின் விலக்கு பெறுவதற்காக விதிமுறைகள் பின்வருமாறு:
- இரண்டாவது டோஸ் பெற்ற இரண்டு வாரங்களை முடித்திருக்க வேண்டும்
- கத்தார் சுகாதாரதுறையால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் எடுத்திருக்க வேண்டும்
- கத்தார் புறப்படுவதற்கு முன்பு நீங்கள் “Ehteraz” பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுகாதார தகவல்களை புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு அதில் பதிவேற்ற வேண்டும்.
- கோவிட்சீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும். இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ளவர்களில், குழந்தைகளின் தனிமைப்படுத்தல் விலக்கு தொடர்பான விதிமுறைகள்.
- 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை.
- தடுப்பூசி எடுத்துக்கொண்ட 12 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை
- தடுப்பூசி போடாதவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். பெற்றோர்களில் ஒருவர் தடுப்பூசி போட்டவராக இருந்தாலும் குழந்தைகளுடன் இருக்க வேண்டும்.
- அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுக்காத Red List-யில் உள்ளவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல்,Yellow List-யில் உள்ளவர்களுக்கு 7 நாட்கள் மற்றும் Green List-யில் உள்ளவர்களுக்கு 5 நாட்கள் கட்டாயம் ஆகும்.