குவைத்தில் பெட்ரோல் பம்புகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு என்ற செய்தி வெளியான நிலையில் அப்படிப்பட்ட எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது
Image credit:Oula Official
குவைத்தில் பெட்ரோல் பம்புகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்காது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது
குவைத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்க அனுமதி வழங்கப்படாது என்று வர்த்தக அமைச்சகம் எச்சரித்துள்ளது. அமைச்சின் அனுமதியின்றி இதுபோன்ற எந்தவொரு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குவைத்தில் உள்ள 'உலா' பெட்ரோல் நிலையங்களில் சேவை கட்டணமாக ஆகஸ்ட்-1,2021 முதல் கூடுதலாக 200 ஃபில்களை வசூலிக்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முடிவு செய்திருந்தது. இந்த தகவல் வெளியான நிலையில் வர்த்தக அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.