குவைத்தில் இனிமுதல் விசா புதுப்பிக்க, விசா வகையை பொறுத்து 3 மற்றும் 2 வருடங்கள் என்ற கணக்கில் சுகாதார காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும்
குவைத்தில் விசா புதுப்பிக்க குறைந்தது 3 மற்றும் 2 வருடங்கள் என்ற கணக்கில் சுகாதார காப்பீட்டு கட்டணம் செலுத்த வேண்டும்
குவைத்தில் வெவ்வேறான பிரிவுகளில் வேலை செய்கின்ற மற்றும் குடும்பத்துடன் வசிக்கின்ற வெளிநாட்டவர்கள், அவர்களின் விசா புதுப்பித்தல் செய்வதற்கு முன்னர் எடுக்கப்படும் சுகாதார காப்பீட்டு( Health Insurance) கட்டண நடைமுறைகள் திருத்தப்பட்டு நேற்று(14/07/21) புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய அறிவிப்பின்படி குவைத்தில் இருந்துக் கொண்டே விசா புதுப்பிக்க வேண்டும் என்றால் பின்வரும் வகையில் சுகாதார காப்பீட்டு( Health Insurance) கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின்படி விட்டுத்தொழிலாளர் விசா(Article-20) வைத்திருப்பவர்கள் இனிமுதல் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கும்,வேலை விசா(Article-18) மற்றும் குடும்ப விசா(Article-22) வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கும் சுகாதார காப்பீடு தொகை செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நாட்டிற்கு வெளியில்(குவைத்திற்கு வெளியில்) இருந்து தங்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க மேற்குறிப்பிட்ட 3 பிரிவுகளில் உள்ளவர்கள் சுகாதார காப்பீட்டு கட்டணத்தை ஒரு வருடத்திற்கு மட்டுமே செலுத்தினால் போதுமானது என்றும் வீட்டுவசதி வாரியத்திற்கான உதவி துணை செயலாளர் அன்வர் அல் புர்கெஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த புதுப்பிக்கப்பட்ட புதிய முடிவு இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுடன் வசிப்பவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது.