குவைத்தில் மீண்டும் ஊரடங்கு ஏற்படுத்துவதை தவிர்க்க முடிந்த அளவுக்கு வேறு மாற்று வழிகளை தேடுவதாக அதிகாரி தகவல்
Image : ஷேக் ஹம்மது அல் அலி
குவைத்தில் ஊரடங்கு ஏற்படுத்துவதை தவிர்க்க மாற்று வழிகளை ஆராய்வதாக அதிகாரி தெரிவித்துள்ளார்
குவைத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக முடிந்த அளவுக்கு வேறு மாற்று வழிகளை தேடுவதாக துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும், கொரோனா உயர்மட்ட ஆய்வுக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்மது அல் அலி அல் சபா தெரிவித்துள்ளார். இதற்காக தடுப்பூசி முடிந்த அளவுக்கு மக்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் பரிசீலிக்கப்படுகின்றன எனவும், நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டுகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஆபத்தான அளவுக்கு அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
அதேப்போல் தடுப்பூசி போட நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்(வெளிநாட்டினர்) முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் விமான நிலையத்தின் இயக்கம் கட்டுப்பாடுகளுடன் விரைவில் சாதாரண நிலைக்கு திரும்பும் எனவும், இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியே செல்கின்ற அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் குவைத்திற்கு திரும்பி வருகின்ற குடியிருப்பாளர்கள்(வெளிநாட்டினர்) அனைவரும் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருக்க வேண்டும் என்றும் ஷேக் ஹமாத் அல் அலி கோரினார்.