குவைத்தில் முன்அனுமதி இல்லாமல் தடுப்பூசி வழங்குவதாக தவறான தகவல், கட்டுக்கடங்காத நெரிசலால் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Image : நேற்றைய மக்கள் கூட்டம
குவைத்தில் அனைவரும் தடுப்பூசி வழங்குவதாக தவறான தகவல்,கட்டுக்கடங்காமல் ஒன்று கூடிய மக்கள் கூட்டம்
குவைத்தில் முன்அனுமதி(Appointment) இல்லாமல் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பரப்பிய போலி செய்திகளை நம்பி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தடுப்பூசி மையங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மதியம் முதல் திரண்டனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் பல தடுப்பூசி மையங்களிலும் காணமுடிந்தது. மேலும் முன்அனுமதி(Appointment) வழங்கப்பட்டு தடுப்பூசி எடுப்பதற்காக வந்த நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டது. இந்த போலி செய்தி நேற்று நண்பகல் முதல் சமூக ஊடகங்களில் பரவியதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி காட்டுத்தீபோல் பரவிய நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பே அனுமதி பெறுவதற்காக பதிவு செய்தும் Appointment கிடைக்காதவர்கள் உட்பட பலரும், தங்களின் அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு வந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயற்சி செய்தனர். கூட்டம் கட்டுப்பாட்டை மீறிய நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் பல இடங்களில் பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியது. மேலும், இது தொடர்பாக சுகாதரத்துறை அமைச்சகம் சிறப்பு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் SMS மூலம் செய்தி பெறுபவர்களுக்கு மட்டுமே Appointment(முன்அனுமதி) வழங்கப்படும் என்றும் போலியாக பரப்பப்படும் செய்திகளை ஆதாரங்கள் இல்லாமல் யாரும் நம்பக்கூடாது என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளை மட்டுமே உண்மையான தகவல்கள் பெறுவதற்காக நீங்கள் Follow செய்ய வேண்டும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.