குவைத்தில் வெளிநாட்டினரின் விசா புதுப்பிக்க போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை கட்டாயமாக்க பாரளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்
Image credit: பாராளுமன்ற உறுப்பினர்
குவைத்தில் வெளிநாட்டினரின் விசா புதுப்பிக்க போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை கட்டாயமாக்க பரிந்துரை
குவைத்தில் வெளிநாட்டினரின் விசா புதுப்பிப்பது உள்ளிட்ட சிலவற்றுகாக சம்பந்தப்பட்ட நபருக்கு போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வெளியாகியுள்ள செய்தியில் குவைத்திகள் வேலையில் சேருவதற்காகவும்,திருமணம் செய்து கொள்வதற்கு முன்பும் மற்றும் வெளிநாட்டினரின் குடியிருப்பு அனுமதி(விசா) புதுப்பிக்கவும் போதைப்பொருள் பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஹன்னத் அல்-சாயர் அவர்கள் பரிந்துரைத்துள்ளார். அவர் இது தொடர்பான திட்டத்தை நாடாளுமன்றத்தின் சுகாதார மற்றும் நீதித்துறை அமைச்சகங்களுக்கு சமர்ப்பித்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் குவைத்தில் சிறிய மற்றும் பெரிய 17,000 க்கும் மேற்பட்ட போதைப்பொருள் வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும் , ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் மட்டுமே இவற்றின் பயன்பாட்டை நாட்டிலிருந்து படிப்படியாக குறைக்க முடியும் எனவும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பரிசோதனை என்பது ஒரு படியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.