குவைத்தில் 6 பிரிவுகளை சேர்ந்தவர்கள் விசா மாற்றம் செய்ய வழங்கப்பட்ட முடிவை மனிதவள ஆணையம் மீண்டும் ரத்து செய்தது
குவைத்தில் இந்த 6 பிரிவுகளை சேர்ந்தவர்கள் தற்காலிக தளர்வை ரத்து செய்வதால் விசா மாற்றம் செய்ய முடியாது
குவைத்தில் கோவிட் நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 6 பிரிவுகளை சேர்ந்தவர்கள் விசா(இகாமா) மாற்றம் செய்ய தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட முடிவை மனிதவளத்திற்கான பொது ஆணையம் ரத்து செய்துள்ளது. ஸ்பான்சரின் அனுமதியுடன், மீன்வளம், விவசாயம், ஜாமியா, வேட்டை, சிறு வணிகம் மற்றும் கால்நடை ஆகிய துறைகளில் வேலை செய்தவர்களுக்கு விசாக்கள் மாற்ற அனுமதி வழங்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிட் நெருக்கடியை அடுத்து தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், நாளை வியாழக்கிழமை(15/07/21) முதல் இந்த தற்காலிக உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும் மனிதவளத்திற்கான அதிகார சபையின் இயக்குநர் ஜெனரல் அகமது மூசா தெரிவித்துள்ளார்.