இந்தியர்களின் துயரத்தில் பங்கு கொள்வதாக குவைத் வெளியுறவுத்துறை இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு குவைத் இரங்கல் தெரிவி்த்துள்ளது
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு(நிலச்சரிவில்) குறித்து குவைத் தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியதுடன், இந்தியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குவைத் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் ராய்கட்டில் நேற்று ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர், இதில் பலர் படுகாயங்களுடன் மற்றும் சிலர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் 49 பேரின் உடல்கள் இதுவரையில் மீட்டுள்ளதாகவும், 30 பேரை இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல்படை உள்ளிட்டவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.