அமீரகத்தில் வேலை இழந்த தமிழர் மஹ்சூஸ்(Mahzooz) டிராவில் 5,00,000 திர்ஹாம் வென்றார்
Image : வென்ற நசீர் அலி(வயது-53)
அமீரகத்தில் வேலை இழந்து கடந்த பல மாதங்களாக தவித்த தமிழருக்கு 5,00,000 திர்ஹாம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது
துபாயில் கோவிட் -19 தொற்றுநோயால் வேலை இழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நசீர் அலி(வயது-53) அவர்கள் சமீபத்திய Mahzooz டிராவில் 5,00,000 திர்ஹாம் வென்ற நிலையில் சொந்த உணவகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்த முன்னாள் மனிதவள நிர்வாகியான அவர் ஜூலை-17 அன்று நடைபெற்ற live டிராவின் போது 7-12-31-35-39-43 ஆறு எண்களில் ஐந்து இலக்கம் பொருந்தியிருந்தது. இதன் மூலம் 1 மில்லியன் திர்ஹாம் இரண்டாம் பரிசாக வென்றார். இதை அவர் மற்றொரு நபருடன் இந்த தொகையை பகிர்ந்து கொள்வதால் 5,00,000 திர்ஹாம் அவருக்கு கிடைக்கும்.
வேலையை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளின் தந்தையான நசீர் அலி தனது குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டியது நிலை ஏற்பட்டது. வேலை இல்லாமல் இருந்த அவர் செலவினங்களைக் குறைக்கவே தாயகம் அனுப்பினார். இதன் காரணமாக நான் தனிமையானதை உணர்ந்தேன்,ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை எனவும், நான் எப்போதும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றினை நம்பினேன் என்றார். இதன் காரணமாக இந்த 36-வது Mahzooz டிராவின் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்தது, அதில் நான் 5,00,000 டாலர்களை வென்றேன் என்ற தகவல் இருந்தது. என்னால் வெறுமனே என் கண்களை நம்ப முடியவில்லை. வாழ்க்கையை மாற்றிய இந்த வெற்றி இருந்து மீள்வதற்கு எனக்கு சிறிது நேரம் ஆனது. நான் உடனடியாக எனது குடும்பத்தினரை அழைத்து மகிழ்ச்சியுடன் அவர்களிடம் இந்த செய்தியை சொன்னேன், எங்கள் கவலைகள் அனைத்தும் இதன் முடிவுக்கு வந்துவிட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.
நான் எப்போதும் துபாயில் சொந்த உணவகத்தை தொடங்க வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு இது சாத்தியமில்லை என்று நினைத்தேன். ஆனால் எதுவும் சாத்தியமானது என்பதை இப்போது நான் உறுதியாக அறிந்தேன், என்று மகிழ்ச்சியாக நசீர் அலி குறிப்பிட்டார். அதுபோல் நான் எனது சொந்தத் தொழிலைத் தொடங்கியதும், எனது குடும்பத்தை மீண்டும் அழைத்து வருவேன், இதனால் நாங்கள் மீண்டும் ஒன்றிணைவோம். அந்த நல்ல நாட்கள் வர என் மனைவியும் என் இரண்டு குழந்தைகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதுபோல் வேலையில்லாமல் இருப்பதன் கஷ்டங்களை அனுபவித்தவன், அதனால் இந்த வெற்றி தொகையின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு உதவ ஒதுக்குவேன் என்றார். நான் வேலை தேடும் போது பல கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறேன். வேலை இல்லாமல் இருப்பது எப்படி என்று எனக்கு நன்றாக தெரியும். எனவே வேலையற்ற நபர்களை ஆதரிப்பேன், என்று அவர் உறுதியளித்தார்.