குவைத்தில் பேரணி நடத்தியதற்காக வெளிநாட்டவரை நாடு கடத்தும் முடிவுக்கு எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்தனர்
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே
குவைத்தில் பேரணி நடத்தியதற்காக வெளிநாட்டவரை நாடு கடத்தும் முடிவுக்கு எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
குவைத்தில் பேரணிகளை நடத்தியதற்காக வெளிநாட்டவர்களை நாடு கடத்த அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்(MP) ட்விட்டரில் பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்தனர். "அப்துல்லாவை நாடு கடத்த வேண்டாம்" என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் கரீம் அல் காந்தரி, அப்துல் அஜீஸ் சகாபி, முஹன்னத் சாயர், தாமார் சுவைத், ஃபார்ஸ் டைஹானி மற்றும் ஒபைத் வாஸ்மி ஆகியோர் வெளிநாட்டு சமூகத்தின் கருத்து சுதந்திரத்திற்காக ஆதரவாக முன்வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி போடாதவர்களை மால்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழைய தடை விதிக்கும் அமைச்சரவை முடிவை எதிர்த்து குடிமக்களான சமூக ஆர்வலர்கள் சிலர் குவைத் சிட்டியில் உள்ள ஐராடா சதுக்கத்தில் பேரணியை நடத்தினர். இதில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளைஞரான அப்துல்லா கலந்துகொண்ட நிலையில் அவரை நாடு கடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. இந்த முடிவு உலகளாவிய மனித உரிமைகளுக்கான மீறல் எனவும், கருத்து சுதந்திரம் என்பது மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்(MP) கூறியுள்ளனர்.