குவைத்தில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதாக கோவிட் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்
Image : Kuwait Moh
குவைத்தில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்
குவைத்தின் கோவிட் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் காலித் ஜாரல்லா அவர்கள் நாட்டில் கோவிட் பரவல் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்று கூறினார். கோவிட் பரவல் அதிகமாக இருப்பதால் நாட்டின் நிலைமை தற்போது அசாதாரணமான நிலைக்கு செல்கிறது எனவும், சுகாதாரத்துறை ஊழியர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் எனவும், நோயை தடுப்பதற்காக கைகொள்ளும் நடவடிக்கைகளுக்காக நமது சுகாதாரப் போராளிகளை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுகாதார விதிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி எடுப்பதற்கான முன்பதிவு செய்வது உள்ளிட்டவை மேற்கொள்வது நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளரின் பொறுப்பு என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.