அமீரகம் மற்றும் ஓமானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறைகளை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
அமீரகம் மற்றும் ஓமானில் பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
ஓமானில் ஈத் அல்-ஆதா என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் இன்று(11/07/21) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 22 வியாழக்கிழமை வரை 5 நாட்கள் பொது விடுமுறை அறிவித்து உத்தரவை வெளியிட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஜூலை 25 ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதிநாள் சேர்த்து ஓமானில் மொத்தம் 7 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும்.
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அமைச்சகங்கள், துணை அலுவலங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் ஜூலை 19 திங்கள் முதல் ஜூலை 22 வியாழக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறையாக இருக்கும் (துல் ஹஜ் 9 முதல் துல் ஹஜ் 12 வரை). வார இறுதிநாள் சேர்த்து மொத்த 6 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும். அணைத்து துறைக்கும் ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வேலை நாளாக இருக்கும்.