சவுதியில் உணவகங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நுழைய ஆகஸ்ட் முதல் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி
Image : Saudi Arabia
சவுதியில் முக்கியமான இடங்களில் நுழைய ஆகஸ்ட் முதல் தடுப்பூசி கட்டாயம் என்ற தகவல் வெளியாகியுள்ளன
சவுதி அரேபியாவில் ஆகஸ்ட்-1,2021 முதல் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று நகராட்சி ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் மால்கள், உணவகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த இடங்களுக்குச் செல்லும்போது,தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆவணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.