வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளில் கேரளா வழியாக தமிழக எல்லைகளில் நுழையும் பயணிகள் PCR பரிசோதனை செய்ய தேவை இருக்காது
Image credit: Air India
வெளிநாடுகளில் இருந்து கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு வருகின்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை தேவையில்லை
வளைகுடா உள்ளிட்ட எந்த நாடுகளில் இருந்தும் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் உட்பட மூன்று மாநிலங்களுக்குச் செல்வோர் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருந்தால் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சலுகை பெறுவதற்கு பயணிக்கும் பயணி இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு 15 நாட்கள் கடந்த நபராக இருக்க வேண்டும். இதன் மூலம் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் ஆர்டி-பிசிஆர்(RT-PCR) பரிசோதனை எடுத்துக்கொண்ட எதிர்மறையான சான்றிதழ் சமர்ப்பிக்க தேவை இருக்காது, மாறாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ்கள் சமர்பித்தால் போதுமானதாக இருக்கும் என்றும் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதன் மூலம் திருவனந்தபுரம் வழியாக தமிழகத்தில் நுழையும் பயணிகள் மற்றும் கொச்சி வழியாக கோயம்பத்தூர் உள்ளிட்ட தமிழக எல்லைகளில் நுழையும் நபர்களும் பயணத்திற்கு முன்பாக இந்த புதிய அறிவிப்பு தொடர்பான தகவலை பயணச்சீட்டு எடுக்கும் டிராவல் ஏஜென்சிகள் அல்லது அந்தந்த வளைகுடா நாடுகளில் உள்ள ஏர் இந்தியா அலுவலக தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தெளிவான விளக்கத்தை பெறுவது சிறந்ததாக இருக்கும்.