குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களின் விசா புதுப்பிக்க 2000 தினார் வருடாந்திர கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற செய்தி வெளியாகியுள்ளது
Image : விசாவின் மாதிரி புகைப்படம்
குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்டவர்களின் விசா 2000 தினார்கள் கட்டணத்துடன் புதுப்பிக்க முடிவு
குவைத்தில் உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினரின் குடியிருப்பு அனுமதி( Resident Visa) பத்திரத்தை புதுப்பித்து வழங்க ஆண்டுக்கு 2000 தினார்கள் வருடாந்திர கட்டணம் வசூலிக்க இன்று(14/07/21) புதன்கிழமை நடைபெற்ற மனிதவள மேம்பாட்டு துறையின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும் அவர்களிடமிருந்து கூடுதலாக சிறப்பு சுகாதார காப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்படும், இந்த கட்டணம் எவ்வளவு என்பது பின்னர் தீர்மானிக்கப்படும்.
இதற்கிடையே இந்த ஆண்டு ஜனவரி-1,2021 முதல், உயர்நிலைப் பள்ளி கல்வி தகுதி இல்லாத 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு விசா புதுப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் தங்கள் குடியிருப்பு அனுமதி பத்திரத்தை இழந்துள்ளனர்.2000 தினார்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 480,000 வரையில் வரும் இவ்வளவு பணம் கைவசம் இருந்தால் கண்டிப்பாக நாடில் சொந்தமாக சிறிதாக ஒரு சுயத்தொழில் செய்யலாம்.