குவைத் மருத்துவமனைகளில் நீண்டகாலமாக சிகிச்சையில் உள்ள வெளிநாட்டினரை தாயகம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே
குவைத்தில் நீண்டகாலமாக மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள வெளிநாட்டினரை தாயகம் அனுப்ப திட்டம்
குவைத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நீண்ட காலமாக பல்வேறுபட்ட நோய் உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்பி,அவர்களின் தாய் நாடுகளில் தொடர் சிகிச்சைக்காக வழிவகை செய்ய குவைத் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். கோவிட் சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.
குவைத் சுகாதரத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து இதற்கான திட்டங்களைத் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிகிச்சையை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாதவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு சிகிச்சையின் அடுத்த கட்டம் சொந்த நாடுகளில் தொடர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தாய்நாட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது