உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்திலும்,துபாயின் எமிரேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், அபுதாபியின் எட்டிஹாட் 20 வது இடத்திலும் உள்ளன
Image credit: Qatar Airways
உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது
உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்திலும்,துபாயின் எமிரேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், அபுதாபியின் எட்டிஹாட் 20 வது இடத்திலும் உள்ளன
உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது இந்த பட்டியலில் வளைகுடாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்ற மூன்று விமான நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. துபாயின் எமிரேட்ஸ் ஐந்தாவது இடத்திலும், அபுதாபியின் எட்டிஹாட் 20 வது இடத்திலும் உள்ளன. விமானத்துறைகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகளின் சிறப்புகளை மதிப்பிடும் மதிப்பீட்டு நிறுவனமான ஆஸ்திரேலியாவின் விமான மதிப்பீடு டாட்.காம் ஆனது உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலைத் தொகுத்து, ஒவ்வொரு ஆண்டும் முதல் 20 இடங்களில் உள்ள விமானங்களின் பட்டியல் வெளியிடும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலிலை தற்போது வெளியாகியுள்ளன.
விமானத்தின் கேபினின் உள்ளே மேம்படுத்தப்படும் புதுமைகள் மற்றும் பயணிகள் சேவை சிறப்பம்சங்களுடன், கூடுதலாக தற்போதைய கோவிட் சூழ்நிலைக்கேற்ப முன்னெச்சரிக்கை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் கணக்கில் கொண்டு கத்தார் ஏர்வேஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் எமிரேட்ஸ் தங்களுடைய கடந்தகால நிலைமைகளை(Position) திருத்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. பிரீமியம் எக்னாமிக்ஸ் வகுப்பின் சிறப்பே எமிரேட்ஸ் முன்னேற்றத்திற்காக காரணம் ஆகும். இந்த பட்டியலில் அபுதாபியின் எட்டிஹாட் ஏர்வேஸ் 20 வது இடத்தில் உள்ளது. ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ள மற்ற விமான நிறுவனங்கள் ஆகும்.