குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த ரவிசங்கர்
குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்
குவைத்தில் இந்தியா,தமிழகம், திருவாரூர் மாவட்டம்,கொராடச்சேரி பகுதியை சேர்ந்த ரவிசங்கர்(வயது-53) என்பவர் வேலை செய்துவந்த நிலையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட அவர் இன்று(14/07/21) மதியம் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய உடல் சட்ட நடவடிக்கைகள் இன்றே முடிக்கப்பட்டு சர்வதேச கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மாலையில் குவைத்தில் உள்ள சுலபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ரவிசங்கர் அவர்களின் தந்தை பெயர் ராமாமிர்தம் என்பதாகும். மேலும் நல்லடக்கம் தொடர்பான உதவிகளை மக்கள் சேவை மைய அமைப்பினர் செய்வதாகவும் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.