அமீரகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 855 கைதிகளை விடுவிக்க ஷேக் கலீஃபா அவர்கள் இன்று மாலையில் உத்தரவிட்டார்
Image : ஷேக் கலீஃபா அவர்கள்
அமீரகத்தில் 855 கைதிகளை விடுவிக்க ஷேக் கலீஃபா அவர்கள் இன்று மாலையில் உத்தரவிட்டார்
அமீரகத்தில் பக்ரீத்(ஈத் அல்-ஆதா) பண்டிகை வருவதை முன்னிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 855 கைதிகள் விடுவிக்க ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று(13/07/21) மாலையில் உத்தரவை வெளியிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்று வருகின்றன நபர்களே இவ்வாறு விடுவிக்கபடுகின்றனர்.
மேலும் இப்படி விடுவிக்கப்படும் நபர்களில் அமீரகத்தில் கடன் தொடர்பான வழக்குகளில் சிக்கி நபர்களாக இருந்தால் அதுவும் தீர்க்கப்படும் என்று ஷேக் கலீஃபாவின் உத்தரவு கூறுகிறது.ஷேக் கலீஃபாவின் இந்த அறிவிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரக்க, சமரச பண்பு மற்றும் மனிதாபிமான மதிப்புகளை பிரதிபலிக்கிறது. விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குவதையும், குடும்பங்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து நல்வாழ்வுக்கு உகந்த சூழலை உருவாக்குவதையும் இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.