BREAKING NEWS
latest

Tuesday, July 6, 2021

குவைத்தில் கடந்த 6 மாதங்களில் பல்வேறுபட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 7808 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் இந்த ஆண்டு இதுவரையில் 7808 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தில் கடந்த 6 மாதங்களில் பல்வேறுபட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 7808 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் இந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி 7808 வெளிநாட்டவர்கள் இதுவரையில் நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் குடியிருப்பு மீறல்கள், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறயது போன்ற காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஊடகத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டம் ஒழுங்கினை உறுதிப்படுத்த சோதனைகள் தொடர்ந்து நடத்தபடும் எனவும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.நாடு கடத்தப்பட்ட நபர்கள் தவிர சுமார் 700 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை மற்றும் வியட்னாம் நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும். இந்த நாடுகளுக்கான விமான பயண சேவைகள் தற்போது தடைபட்டுள்ள நிலையில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியவுடன் இவர்களும் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comments to குவைத்தில் கடந்த 6 மாதங்களில் பல்வேறுபட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 7808 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

« PREV
NEXT »