ஓமானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன;பக்ரீத் பண்டிகை தினங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று உச்சக்குழு மாலையில் அறிக்கை வெளியிட்டுள்ளது
ஓமானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன;பக்ரீத் தினங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்
ஓமானில் கோவிட் நோய்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க உச்சக்குழு(Supreme Committee) இன்று(06/07/21) செவ்வாய்க்கிழமை மாலையில முடிவு செய்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 16 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 31 வரை இந்த கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஊரடங்கு மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இருக்கும். இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முற்றிலுமாக தடை விதிக்கப்படும், அதுபோல் அனைத்து வணிக,தொழில்துறை நிறுவனங்களை மூடவும் மற்றும் வாகனங்கள் சாலைகளில் இயக்கவும் இந்த நேரத்தில் தடை விதிக்கப்படும்.
மேலும் பக்ரீத் பண்டிகை தினமாக கருதப்படும் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில்(துல் ஹஜ் 10 முதல் 12 வரை) முழுமையான ஊரடங்கு விதிக்கவும் உச்சக் குழு முடிவு செய்துள்ளது. இந்த நாட்களில் வணிக சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வாகன போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் நாட்களில் மக்கள் ஒன்று சேருவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.