இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து இன்று சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது
இந்தியாவில் சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடங்குவது மீண்டும் தாமதமாகும் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் சர்வதேச விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது ஆகஸ்டு-31 வரை நீட்டிக்க முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக இன்று(30/07/21) வெள்ளிக்கிழமை சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உட்பட கோவிட் வைரஸ் பரவுவது குறையாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் இந்தியாவிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தருகின்ற சர்வதேச விமானங்களுக்கான தடை இம்மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுடன் செய்துள்ள Air-Bubble ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிறப்பு சேவைகளை இயக்குவதிலும் மற்றும் சரக்கு விமானங்களை இயக்குவதிலும் எந்த தடையும் இல்லை எனவும் செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.