சவுதியில் இந்தியரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சவுதி குடிமகனுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : செய்தி பதிவுக்கான மட்டுமே புகைப்படம்
சவுதியில் இந்தியரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
சவுதி அரேபியாவில் இந்திய இளைஞரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் இன்று(08/07/21) வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. இந்திய கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அமீர் அலி ஜித்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் காசாளராக வேலை செய்து வந்தார்,இந்நிலையில் அலுவலகத்தில் வைத்து அவர் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சவுதி குடிமகன் ஃபவுத் பின் நோவா பின் முஹம்மது பின் அப்துல்லா என்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தில் நடந்த கொள்ளை முயற்சியின் போது அதை தடுக்க போராடிய அமீர் அலி கொல்லப்பட்டார், மேலும் அவரிடம் இருந்த பணம் திருடிய பின்னர் உடலை மறைக்க முயன்றார். இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றவாளியாக சவுதி குடிமகன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் ஜித்தா குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்தது. இந்த தண்டனையை பின்னர் மேல்முறையிட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததாகவும் இதையடுத்து இன்று ஜித்தா மக்கா மாகாணத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.