வளைகுடாவில் உயிரிழந்த இந்தியர்கள் விபரங்கள் நாடுகள் வாரியாக வெளியாகியுள்ளது;முதலிடத்தில் சவுதி அங்கு இதுவரையில் 1154 பேர் உயிரிழந்தனர்
Image : இந்தியர் உடல் அடக்கம் செய்யும் காட்சி
வளைகுடாவில் இதுவரையில் கொரோனா காரணமாக உயிரிழந்த இந்தியர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது
வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் விபரங்கள் நாடுகள் வாரியாக வெளியாகியுள்ளது. இதில் குவைத்தில் மட்டுமே கொரோனா பாதிப்பு துவங்கியது முதல் இதுவரையில் 546 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோவிட் காரணமாக உலகமும் முழுவதிலுமுள்ள சுமார் 70 நாடுகளின் பல்வேறு பகுதிகளில் வைத்து மொத்தம் 3570 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்களவையில் வி.பி.அப்துல் வஹாப் எம்.பி. அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவு அமைச்சகம் இதை தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் கோவிட் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்த நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது அங்கு இதுவரையில் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த படியாக அமீரகம் உள்ளது அங்கு இதுவரையில் 894 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபோல் ஓமானில் 384 இந்தியர்களும், பஹ்ரைனில் 196 இந்தியர்களும், கத்தாரில் 106 இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.அதேபோல் வெளிநாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் உயிரிழந்த பட்டியலில் முதல் ஐந்து நாடுகளாக வளைகுடா நாடுகள் இடம் பெற்றுள்ளது.