BREAKING NEWS
latest

Wednesday, July 14, 2021

குவைத்தில் இந்தியரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக 18 மணிநேரத்தில் 30,390 தினார்கள் நிதி திரட்டப்பட்டது

குவைத்தில் கொலை செய்யப்பட்ட இந்தியரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக 18 மணிநேரத்தில் 30,390 தினார்கள் திரட்டப்பட்டது

Image credit: அல்-கபாஸ் பத்திரிக்கை

குவைத்தில் இந்தியரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக 18 மணிநேரத்தில் 30,390 தினார்கள் நிதி திரட்டப்பட்டது

குவைத்தில் உள்ள தினசரி பத்திரிக்கையான அல்-கபாஸ் முயற்சியின் ஒரு பகுதியாக,நமா அறக்கட்டளை சங்கத்தின் ஒத்துழைப்புடன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடிமகனின் வீட்டில் வைத்து படுகொலை செய்யபட்ட இந்தியரான Delivery தொழிலாளி ஷேக் பாஷாவின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்காக நன்கொடைகளை சேகரிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் 18 மணி நேரத்திற்குள் நல்ல இதயமுள்ளவர்கள் செய்த நிதி உதவி சுமார் 30,400 தினார்கள் (101,000 அமெரிக்க டாலர்களுக்கு சமம்) சேர்ந்துள்ளது. பத்திரிக்கை திட்டமிட்ட இலக்கு 30,000 தினார் என்ற நிலையில் அதை விடவும் அதிகமாக நிதி திரண்டுள்ளது.

நேற்றைய தினம் பாஷாவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் வாழ்க்கை தொடர்ந்து சிறப்பாக இருக்காது என்று அல்-கபாஸ் பத்திரிகை நிருபர் Ali Khaja விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். குறிப்பாக அவரது குடும்பத்திற்கு ஒரே வருமானம் வழங்குபவராக பாஷா இருந்தார் எனவும், தனது குடும்பத்தை அவர் கடந்த 2019 முதல் பார்க்க செல்லவில்லை என்றும், அவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் எனவும், 10 வயது மற்றும் வயது 8 ஆகிறது எனவும், மேலும் பாஷாவின் தந்தை ஒரு மாதத்திற்கு முன்பு காலமானார் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தொண்டு நிதி அவரின் இழப்புக்கு ஈடு ஆகாது எனவும், குடும்பத்தின் துன்பத்தைத் தணிக்கும் என்று தான் நம்புவதாகவும் இன்று Khaja அவர்கள் மீண்டும் தெரிவித்தார்.

Add your comments to குவைத்தில் இந்தியரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக 18 மணிநேரத்தில் 30,390 தினார்கள் நிதி திரட்டப்பட்டது

« PREV
NEXT »