குவைத்தில் தடுப்பூசி போட பதிவு செய்து Appointment கிடைக்காதவர்கள் அதனை சரிபார்த்து உறுதிப்படுத்த சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது
Image : குவைத் தடுப்பூசி மையம்
குவைத்தில் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்து அனுமதி(Appointment) தாமதமாகும் நபரா நீங்கள்....
குவைத்தில் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்து அனுமதி(Appointment) கிடைக்க தாமதமாகும் நபராக நீங்கள் இருந்தால் இது நீங்கள் அனுமதிக்காக பதிவு செய்த நேரத்தில் தவறுகள் செய்திருக்கலாம் அல்லது அனுமதிக்காக(Appointment) அனுப்பிய Message-ஐ நீங்கள் பார்க்காமல் தவறவிட்டதாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட நபர்கள் அதிகாரப்பூர்வ போர்ட்டலில்(தளத்தில்) உள்நுழைந்து நீங்கள் பதிவுசெய்த செயல்முறையில் எதாவது தவறு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதலான விபரங்கள் மிஷிரிஃப் தடுப்பூசி மையத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து(IT Department) கிடைக்கும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் தடுப்பூசி எடுக்க Link அடங்கிய அனுமதி(Appointment) Message அனுப்பிய நிலையில் அதை தவற விட்டிருந்தால் நீங்கள் மீண்டும் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி எடுப்பதற்காக பதிவுசெய்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு இன்னும் Appointment கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சகம் இப்படி ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள 7.5 லட்சம் பேர் தடுப்பூசி போட இன்னும் பதிவு செய்யவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.