குவைத்திலிருந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை சுகாதார அமைச்சகம் திருத்தி வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது
Image : சான்றிதழ் திருத்தத்திற்கு முன்பும்,பின்பும்
குவைத்திலிருந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை சுகாதார அமைச்சகம் திருத்தியுள்ளது
குவைத்திலிருந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை சுகாதார அமைச்சகம் தற்போது திருத்தி வெளியிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.நேற்று(08/07/21) வரையில் தடுப்பூசியின் பெயர் சான்றிதழ்களில் "ஆக்ஸ்போர்டு" என்று மட்டுமே இருந்தது. இனிமுதல் இவை ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ரா ஜெனெகா(Oxford/Astra Zeneca) என்று திருத்தம் செய்யப்பட்டு காணப்படும். நள்ளிரவு(09/07/21) முதல் இந்த திருத்தம் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே குவைத்திலிருந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கடந்த காலங்களில் எடுத்துக்கொண்ட நபர்கள் விமான பயணம் உள்ளிட்ட தேவைகளுக்காக சுகாதார அமைச்சகத்தின் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் தளத்திற்கு சென்று திருத்தம் செய்யப்பட்ட(Auto Updated) புதிய சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் விமான பயணங்களின் போது தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ள நிலையில் சில நாடுகளில் தடுப்பூசியின் பெயர் ஆக்ஸ்போர்டு என்று மட்டும் குறிப்பிடவில்லை முழு பெயரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு வழங்கும் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் தான் தற்போது சுகாதார அமைச்சகம் இந்த திருத்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் இருந்து கோவ்ஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டு சுகாதரத்துறை வெளியிட்டுள்ள தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு குவைத் சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள சான்றிதழிலும் ஆக்ஸ்போர்டு என்றே குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்தத் திருத்தம் பொருந்துமா என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. திருத்தப்பட்ட சான்றிதழ் பதிவிறக்கம் செய்தார்கள் Comment செய்யவும்.