குவைத்தில் ஆகஸ்ட் முதல் குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய போக்குவரத்து நிர்வாக இயக்குநர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்
குவைத்தில் ஆகஸ்ட் 1 முதல் குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்
குவைத்தில் ஆகஸ்ட் 1 முதல் அனைத்து குடியிருப்பாளர்களும்(வெளிநாட்டினர்) நிபந்தனைகளுடன் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று குவைத் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் இயக்குநர் யூசெப் அல் பாவ்சன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சரவையின் முடிவுகளின்படி குவைத்தால் அனுமதி வழங்கியுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி(Validity Visa) கைவசம் உள்ள அனைத்து பயணிகளும் ஆகஸ்ட் 1 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதற்காக Professional Worker எனவோ அல்லது சாதாரண தொழிலாளர்கள் என்ற பாகுபாடோ இருக்காது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுபோல் நாளொன்றுக்கு நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை இன்று முதல் (7/07/21) 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களின் சான்றிதழ்கள் உள்ள மற்ற ஆவணங்களின் உண்மைதன்மை கண்டறிய சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்பு தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது என்றும், இதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் குவைத் செய்தித்தாள் அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான சிறப்பு பயன்பாட்டு தளத்தை குவைத் அமைச்சகம் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், சில தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக சில நாட்களுக்குள் அவற்றின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல் சான்றிதழ்களில் மோசடிகள் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது சிறப்புக் குழுவின் மேற்பார்வையில் இவற்றின் பரிசுத்தொகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தளத்தில் பதிவு செய்த நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் வழியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிகிறது. இருப்பினும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் உட்பட பலர் ஏற்கனவே தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்த தளத்தில் பதிவு செய்திருந்தனர். அனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரையில் பதில் எதுவும் வராத நிலையில் குழப்பமடைந்துள்ளனர்.