குவைத்தில் இயல்பு வாழ்க்கை திரும்புவது மிக விரைவில் கைகூடும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Image : பிரதமர் சுகாதாரதுறை ஊழியர்களுடன்
குவைத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிக விரைவில் கைகூடும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அவர்கள் தெரிவித்தார்
குவைத்தில் வசிக்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவது மிக விரைவில் கைகூடும் அதன் அருகில் நாம் உள்ளோம் என்றும் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதாரத்துறை செய்து வருகின்ற துரிதமான நடவடிக்கைகள் குறித்து அறிய பிரதமர் நாட்டின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக வருகைதந்து பார்வையிட்டார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான படிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும்,சுகாதார ஊழியர்களின் அயராத நடவடிக்கைகளால் இது சாத்தியமானது எனவும், இந்த ஆண்டு கடவுளின் அருளால் நம் மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளில் அமர்ந்து படிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கைகள் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் துரிதப்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் சமூக பாதுகாப்பு திறன் முழுமையாக கைகூட முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சுகாதார அமைச்சர் பசில் சபா மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் டாக்டர். முஸ்தபா அல் ராடாவும் பிரதமருடன் மருத்துவமனைகளை பார்வையிட்டனர்.